பார்வையைப் பறிக்கும் நீரிழிவு

இன்சுலின் உடலின் உயிர்க் கலன்களுக்குத் தேவையான குருதியிலுள்ள குளுக்கோசை உயிர்க்கலத்தினுள் உற்செலுத்த உதவுகின்றது.

இன்சுலின் தொழிற்பாடு குறைவதனாலோ அல்லது குறைவதாக சுரப்பதனாலோ அல்லது சுரக்கப்படும் இன்சுலின் தரம் குறைவதனாலோ குருதியிலுள்ள குளுக்கோசின் அளவு கூடி இறுதியில் சிறுநீருடன் வெளிச் செல்வதே நீரிழிவு ஆகும்.

இதனை ( Diabetes Mellitus) என்று மருத்துவத்தில் அழைக்கப்படும்

( Diabetes) என்றால் (Topass) அல்லது ( Flow throught Excessive urination) & ( Mellitus) என்றால் ( Sweet) என்று பொருள்படும்.

இந்த நோயானது சகல வயதினருக்கும் சகல வகுப்பினருக்கும் கண், மூளை, இதயம் மற்றும் சிறுநீரகம் போன்ற சகல அங்கங்களையும் பாதிப்பதனாலும் இந்த நோய் வந்தால் மற்றைய சகல நோய்களும் ( ரோகங்கள்) சேர்ந்து வருவதனால் இந்த நோயை சலரோகம் என்று சொல்வதிலும் பார்க்க சகலரோகம் என்று சொல்வது தான் மிகப் பொருத்தமாக இருக்கும்.

கண்பார்வையைப் பாதிக்கும் நீரிழிவு

நீரிழிவு நோய் கண், மூளை இருதயம் மற்றும் சிறுநீரகத்தைப் பாதிக்கும்

இந்த நோய் உள்ளவர்களுக்கு மற்றவர்களை விட பார்வைக் கோளாறு ஏற்படும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம்.

கண்ணில் முக்கியமாக பின்புறமுள்ள விழித்திரையின் குருதி நாளங்களைப் பாதிக்கும்.

விழித்திரையில் ஏற்படும் மாறுதல்களை கண் மருத்துவர்களால் மட்டுமே பரிசோதித்துக் கண்டறிய முடியும். மூளை, இருதயம் மற்றும் சிறுநீரகங்களிலும் ஏற்படுவதால் இந்த பரிசோதனைகளால் இவற்றின் தன்மைகளையும் அறிய முடியும்.

நீரிழிவு நோயால் ஏற்படும் விழித்திரையின் பாதிப்பு, நோயின் தீவிரம் மற்றும் எவ்வளவு காலம் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை பொறுத்தது.

பல வருடங்கள் நோய் உள்ளவர்களின் 70 முதல் 80 சதவீதம் பேருக்கு விழித்திரைப் பாதிப்பு ஏற்படும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு பார்வை இழக்கும் வாய்ப்பு மற்றவர்களை விட 25 மடங்கு அதிகம் உள்ளது.

குறைந்த பார்வை அல்லது பார்வை இழப்பு ஏற்படும் வரை எந்தவித அறிகுறிகளும் தெரியாது.

விழித்திரைபாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து, லேசர் சிகிச்சையளித்தால் கணிசமான அளவில் பார்வை இழப்பைத் தடுக்கலாம்.

இலேசர் சிகிச்சையால் இருக்கும் பார்வையை பாதுகாக்க முடியுமே தவிர இழந்த பார்வையை திரும்பப் பெற முடியாது.

விழித்திரைப் பாதிப்பால் ஏற்படும் பார்வை இழப்பைத் தடுக்க நீரிழிவு நோயாளிகள் அனைவரும் 12 மாதத்துக்கு ஒரு முறையேனும் தங்கள் கண்களை கண் மருத்துவரிடம் அவசியம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். விழித்திரை பாதிக்கப்பட்டால் அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் கண் பார்வை முற்றிலும் இழக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

மருத்துவர் S.T.S.சந்திரகுமார், கண் மருத்துவ நிபுணர்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of