தொப்புள்க்கொடி வெளியேற்றம் – cord prolapse

தொப்புள் கோடி தாயின் இரத்தத்தில் இருந்து குழந்தைக்கு உயிவாழத் தேவையான பதார்த்தங்களை பரிமாறுவதற்கும்,குழந்தையின் இரத்தத்தில் இருந்து கழிவுகளை தாயின் இரத்தத்திற்கு அனுப்புவதற்கும் உதவுகிறது.

இது வழமையாக குழந்தை பிறக்கும் போதே குழந்தியோடு சேர்ந்து வெளிவரும்.

ஆனால் சில வேளைகளில் இது குழந்தை பிறப்பதற்கு முன்னமே வெளிவரலாம் இது cord prolapse  எனப்படுகிறது.

இது மிகவும் குழந்தைக்கு மிகவும் ஆபத்தான நிலையாகும்.

இது ஏற்படும் பெண்களில் சிலவேளைகளில் தொப்புள் கொடி வெளியே வெளிப்படலாம் அல்லது கருப்பையை விட்டு வெளியேறிய தொப்புள் கொடி உங்கள் பிறப்பு உறுப்பினுல்லேயே இருக்கலாம்.

அப்போது உங்கள் பிறப்பு உறுப்பினுல்லேயே எதோ ஒன்று இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம்.

அவ்வாறான சந்தர்ப்பத்தில் நீங்கள் தொப்புள் கொடியை கையால் தொடுவதைத் தவீர்த்து கீழே உள்ள படத்தில் உள்ளது போன்ற நிலையில் இருந்தவாறே விரைவாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும்.

குழந்தை உயிரோடு இருக்கும் பட்சத்தில் மிகவும் விரைவாக சீசர் செய வேண்டி வரலாம்.

சிலவேளைகளில் பிரசவத்தில் இருக்கும் போது கூட இது ஏற்படலாம்.

அப்போதும் பிரசவ நிலையைப் பொறுத்து உடனடியாக சீசர் செய்யவேண்டி வரலாம்.

உடனடியாக சீசர் செய்ய வேண்டி வரலாம் என்பதால் இவ்வாறன நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பவர்கள் எந்தவிதமான சாப்போடோ நீராகரமோ உட்கொள்ளாமல் வைத்திய சாலைக்கு செல்லுதல் வேண்டும்.

இது ஏற்படாமல் தடுப்பதற்கோ ,யாருக்கு ஏற்படலாம் என்று எதிர்வு கூறுவதற்கோ முடியாது.

ஆனாலும் குழந்தை பிறப்பிற்கான பிரசவம் ஆரம்பிப்பதற்கு முன்பே நீர்க் குடம் உடைபவர்களுக்கு இது ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதால் , உங்கள் பிறப்புறுப்பில் இருந்து திடீரென நீர் வெளியேறினால் வலி ஏற்பட விட்டாலும் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும்.

மருத்துவர் சிவச்சந்திரன் சிவஞானம்கப்பேற்று & பெண்ணியல் நிபுணர்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of