குழந்தை பிறப்புக்கு உதவும் கருவிகள்

ஒரு குழந்தையின் பிறப்பானது இரண்டு விதமாக நடைபெறலாம்.

ஒன்று சாதாரணமாக யோனி (பெண்ணுறுப்பின் ) வழியான பிறப்பு.அடுத்தது சிசேரியன் எனப்படும் சத்திர சிகிச்சை மூலம் வயிற்றுப் பகுதி வெட்டப்பட்டு குழந்தை வெளியே எடுக்கப் படுத்தல்.

ஒரு குழந்தை பிறக்கும் செயன்முறை labour (பிரசவம் ) எனப்படுகிறது.

ஒரு பிரசவமானது ஒரு குழந்தை பிறப்பதற்கு பல மணி நேரங்களுக்கு முன்னமே தொடங்கி  விடுகிறது.

அதாவது குழத்தை கருப்பையில் இருந்து படிப்படியாக கீழே இறங்கி வது வெளியேறும் செயன் முறையே பிரசவம்(labour) ஆகும். இதற்கு பல மணி நேரங்கள் தேவைப்படுகிறது.

இவ்வாறு பிரசவம் ஆரம்பித்த பின் சில வேளை குழதையின் பிறப்பு தாமதமாகலாம்.

இவ்வாறு தாமதமாகும் போது சில வேளை குழந்தை பிறப்பதற்கான வழி போதியதாக இருக்கும் போதும் குழந்தை பிறப்பது தாமதமாகலாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் குழந்தையின் பிறப்பை இலகுவாக்க forceps .. vaccum எனப்படும் ஆயுதங்கள் பாவிக்கப் படலாம்.

இந்த ஆயுதங்கள் யோனி வழி உள்ளே செலுத்தப்பட்டு குழந்தையின் தலைப்பகுதியில் பொருத்தப்பட்டு குழந்தை கீழ் நோக்கி இழுக்கப்படும்.

இது நன்கு பயிற்றப்பட்ட வைத்தியரினாலேயே மேற்கொள்ளப்படும்.

Forceps எனப்படும் கருவிகள் 

இதன் வளைவுகள் குழந்தையின் தலைப்  பகுதியில் சரியாகப் பொருந்தும் படியாகவே அமைக்கப் பட்டிருக்கும்.

இவை உள்ளே செலுத்தப்பட்டு தலையில் பொருத்தப்பட்டு குழந்தை கீழ் நோக்கி இழுக்கப்படும்.

இது இவ்வாறு முழுமையாக செலுத்தப்படாமல், இரு பகுதியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியும் உள்ளே செலுத்தப்பட்ட பின்பே இரு பகுதியும் பொருத்தப்படும் .

அமுக்க முறையில் செயற்படும் vaccum எனப்படும் கருவிகள்.

இவை ஒரு நுனியில் சிறு குடுவை( கோப்பை போல- cup) கொண்டிருக்கும் ,

இந்த குடுவைகள் குழந்தையின் தலையில் பொருத்தப்பட்டு மறு முனையில் எதிரான அமுக்கம் கொடுக்கப் படும் போது அவை குழந்தையின் தலையின் ஒரு பகுதியை உள் நோக்கி இழுத்து பொருந்தி விடுகின்றன.

பின்பு குழந்தை கீழ் நோக்கி இழுக்கப்படும்.

இந்தக் கருவிகள் குழந்தை பிறப்பதற்கான வழி போதியதாக இருந்தால் மட்டுமே பாவிக்கப்படும்.

மாறாக பிறப்பு வழி போதியதாக இல்லாவிட்டால் சிசேரியன் செய்வதே உகந்தது.

இது வைத்தியரினாலேயே தீர்மானிக்கப்படும்.

மருத்துவர் சிவச்சந்திரன் சிவஞானம்கப்பேற்று & பெண்ணியல் நிபுணர்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of