குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும்போது

Cropped shot of woman doctor checking throat of little girl

குழந்தைகளுக்கு ஏதாவது உடல் நிலை சரியில்லை என்றால் பெற்றோர் பயப்பட்டு வைத்தியரிடம் குழந்தையை உடனடியாக கொண்டு செல்வது இயல்பானதே. அதிலும் மிகப்பொதுவான உடல்நிலைக் குறைபாடு காய்ச்சல் என் பதேயாகும்.

சில சமயங்களில் காய்ச்சல் தொடங்கியவுடனேயே பெற்றோர்குழந்தையை வைத்தியரிடம் கொண்டு செல்வதை அவதானிக்கலாம். அது நல்லது தான். ஏனெனில் காய்ச்சலுக்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றை கண்டறிய வேண்டும், ஆனால் எல் லாச்சந்தர்ப்பங்களிலும்பிள்ளைக்குகாய்ச்சல் நிவாரணி மருந்தைத் தவிர (பரசிற்றமோல்) வேறுமருந்துகள் தேவைப்படுவதில்லை.

முதலில் காய்ச்சல் என்பதை மருத்துவ ரீதியில் வரை விலக்கணப்படுத்தினால், வெப்பநிலையானது உடல் வெப்பமானியில் அளவிடும்போது அது 100.4 பாகை பரனைட் அல்லது 38 பாகை செல்சியசைவிட கூடும்போதே குறிப்பிடத்தக்க காய்ச்சல் உள்ளது எனலாம். ஒருவரது சாதாரண உடல் வெப்பநிலையானது 98.6 பாகை பரனைட் அல்லது 37 பாகைசெல்சியஸ் ஆகும். எனவே உடல்வெப்பநிலை சாதாரணநிலையை விட அதிகரிக்கும் போது குழந்தையின் உடல் வெப்பநிலையை அடிக்கடிசோதித்துப்பார்ப்பது நல்லது.

காய்ச்சல் என்பது உடலில் ஏற்படும் நோய் களுக்கு எதிரான எமது உடலில் ஏற்படும் எதிர்த் தாக்கத்தின் விளைவேயாகும். எனவே கடும் காய்ச்சல் காணப்படும்போதுநோயின்தாக்கம் அதிகமாகவுள்ளது எனத் தீர்மானிக்கலாம். குழந்தைகளைப் பொறுத்தவரையில், புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு காய்ச்சல் என்ன வெப்ப நிலையில் இருந்தாலும் அதைப் பாரதுரமாகக் கருதி உடனடியாகவைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

அதேபோல் ஒரு மாதம் தொடக்கம் மூன்று மாதம் வரை காய்ச்சல் 38 பாகை செல்சியஸ் (1OO.4 பாகை பரண்னைட்) அளவுக்குள் இருத்தல் வேண்டும்

மூன்று மாதத்துக்கு மேல் 39 பாகை செல் சியஸ் (1O2.2 பாகை பரனைட்) அளவை விட உடல் வெப்பநிலை அதிகமாயின் மிக முக்கிய மான நோய் ஏற்பட்டுள்ளது எனலாம்.

வெப்ப நிலையின் அளவைப்போல்காய்ச்சல் காணப்படும் காலமும் முக்கியமானதாகும்.

சாதாரணமாக ஏற்படும் வைரசுதொற்றுக்கள் 4 தொடக்கம் 5 நாள்களில் மாறிவிடும்.

எனினும் டெங்குக் காய்ச்சல் அதிகமாக ஏற்படும் காலங்களில் இரண்டு நாள்களின் மேல் காய்ச்சல் காணப்படுமாயின் குருதிப் பரிசோதனை செய்தல் அவசியமாகும்.

ஒரு குழந்தைக்கு நீண்டநாள்களுக்கு குறிப்பாக 7 நாள்களுக்கு மேல் காய்ச்சல் காணப்பட்டால் வைத்தியசாலையில் அனுமதித்தே சிகிச்சை வழங்க வேண்டும்.

முன்னர் கூறியவாறுகாய்ச்சல் என்பது பலவித நோய்களின் ஓர் அறிகுறியாக அமைவதால் குழந்தைக்கு பாரதூரமானநோய் உள்ளது என்பதைப் பின்வரும் ஏனைய அறிகுறிகள் மூலம் தீர்மானிக்க வேண்டும்.

 • குறிப்பிடத்தக்க அளவில் உணவு உட் கொள்ளாமை அல்லது பால் அருந்தாமை
 • பொதுவான உடல்நிலை காணப்படாமை சோர்வு, மயக்கம்
 • வெளிறிய தோற்றம் அல்லது உடலின் சாதாரண நிறத்தில் மாற்றம்
 • கை, கால்கள் குளிர்வடைந்து காணப்படல்.
 • அதிகமான வாந்தி வயிற்றோட்டம்
 • சிறுநீர்கழிக்கும் அளவு குறைவடைதலும், சிறுநீர் கழிக்கும்போது எரிவு ஏற்படலும்.
 • மூச்சுத்திணறல், மூச்சு விட சிரமப்படல்
 • வலிப்பு ஏற்படல்
 • உடலில் அதிகமாக செம்புள்ளிகள் கொப்புளங்கள் அல்லது கருநீலநிற தளுரும்புகள் ஏற்படல்.
 • அவயவத்தை அல்லது மூட்டை அசைக்க முடியாமையும் மூட்டு வீங்குதலும்
 • கடுமையான வயிற்றுவலி,
 • கடுமையான தலையிடியும், வாந்தியும்
 • குருதியாக வாந்தி எடுத்தல் குருதி கலந்த மலங்கழித்தல் அல்லது முரசால் மூக்கால் குருதிக் கசிவு

மேற்கூறிய அறிகுறிகள் காணப்படின் உடனடியாக வைத்திய சாலைக்கு குழந்தையை கொண்டு செல்லவேண்டும். காய்ச்சலைக் கட்டுப்படுத்த நாம் உடனடி நிவாரணியாக பரசிற்ற மோல் எனும் மருந்தையே சாதாரணமாக பாவிக்கின்றோம்.

குழந்தைகளைப் பொறுத்தவரை நிறைக்கேற்றவாறு சரியான அளவில் பாவிக்க வேண்டும். அதிகளவில் பரசிற்றமோல் மருந்தை உட்கொண்டு ஈரல் பழுதடைந்து பாரதூரமான விளைவுகள் ஏற்படுவதை இப்போதும்நாம்காண்கின்றோம்.

மேலும் டெங்கு காய்ச்சலும் காணப்படுவதால் பரிசிற்றமோல் தவிர ஏனைய காய்ச்சல் நிவாரண மருந்துகளை பாவிப்பது நல்லதல்ல. ( உதாரணம் Iuprofen)

சிலசமயங்களில் காய்ச்சலை குறைக்க அறை வெப்பநிலையிலுள்ள நீரால் நனைந்த துணியால் உடம்பைத்துடைக்கலாம். எனினும் குழந்தைகளுக்கு இந்த முறையானது காய்ச்சலைக் குறைப்பதையும் விட அசெளகரியத்தையும் ஏற்படுத்தும்.

எனவே காய்ச்சலுக்கான சரியான காரணத்தைக் கண்டறிந்து அதற்கான உரிய சிகிச்சையை வழங்க வேண்டும். இறுதியாக குறைந்தபட்சம் எமக்கு தெரிந்திருக்கவேண்டிய விடயம் காய்ச்சல் குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கின்ற வேளையில் அது கடும் காய்ச்சலாக இல்லாதவிடத்தில் அதன் சாதாரண உடல்நிலை காணப்படுமாயின் அல்லது சாதாரணதுடியாட்டம், தொழிற்பாடுகாணப் படுமாயின் அதிகம் நாம் பயப்பட வேண்டிய தில்லை. ஆனால் முன்னர் கூறிய ஆபத்தான அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும்.

Dr..ஸ்ரீசரவணபவானந்தன். குழந்தை நல வைத்திய நிபுணர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of